நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக போதை ஒழிப்பு தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் இந்த சந்தேகநபரை பொலிஸ் போதை ஒழிப்பு தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுங்க பிரிவின் ஊடகப்பேச்சாளர் தர்மசேன கஹதவ தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேற்றைய தினம் கைப்பற்றப்பட்ட ஹெரோயினே இந்த வருடத்தில் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான ஹெரோயின் என அவர் மேலும்குறிப்பிட்டுள்ளார்.


0 Comments