Subscribe Us

நுவரெலியா செல்வது அவ்வளவு குற்றமா...!!


தொடர்ச்சியான விடுமுறை, அதிலும் கோடைவெயில் உச்சத்தில் இருக்கும்போது கிடைப்பது என்பது,இதமான குளிரைத்தேடியே எம்மை நகர்த்தும், அதுமட்டுமல்ல வருடத்தில், எல்லா நிலை ஊழியர்களுக்கும் தொடர்ச்சியாக கிடைக்கும் விடுமுறையை தம் சொந்தங்களுடன் களிப்பது என்பது எவ்வளவு மகிழ்ச்சியான விடையம்.

ஆனால், இந்த மகிழ்ச்சியை எம்மக்கள் கொண்டாடுவது குறித்தும் அதிலும் மலைநாட்டு நுவெரெலியா சென்று கொண்டாடுவது குறித்தும் பல நண்பர்கள் முகநூலில் தமது கண்டனம், கோபம், வெறுப்பு என்பவற்றை வெளிக்காட்டுவது என்பது என்னவகை நியாயம் என்றே எனக்கு புலப்படவில்லை.

நாம் எல்லோரும், கிரிக்கெட் சீசன் வந்தால், மடித்துக்கட்டிக்கொண்டு பதிவுகளும், புகைப்படங்களும், பொதுவெளி சண்டைகளும் இடும்போது வராத கண்டனம், கோபம், வெறுப்பு எல்லாம் அதே போல ஒரு சீசனை கொண்டாடும் மக்கள் மீது வருவதென்பது நமது இயலாமையின் வெளிப்பாடா?

அடுத்தவன் விடுமுறையை விடு...அந்த கொஞ்ச நாட்களாவது அவர்கள் இலங்கையின் இங்கிலாந்தை பார்த்து மகிழட்டும்.

Athambawa Waaqir Hussain

Post a Comment

0 Comments