Subscribe Us

header ads

பணத்தைக் கொண்டு மக்கள் ஆதரவினை திரட்டிவிட முடியாது மஹிந்தவிற்கு டிலான் பெரேரா எச்சரிக்கை


எதிர்காலத்தில் எந்தவொரு ஜனாதிபதித் தேர்தலிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு போட்டியிடக்கூடிய சந்தர்ப்பம் கிடையாது என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்…
எதிர்காலத்தில் மஹிந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் சாசனத்தில் இடமில்லை.
19ம் திருத்தச் சட்டத்திற்கு மஹிந்தவின் மகன் நாமல் ராஜபக்சவும் கை உயர்த்தி சம்மதம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிரவேசித்துள்ளமை, கூட்டு எதிர்க்கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்சினை காரணமாகவே முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
மே தினக் கூட்டத்தினை தவிர்க்கும் நோக்கிலேயே அவர் இவ்வாறு வெளிநாட்டு விஜயம் செய்கின்றார்.
பணத்தைக் கொண்டு மக்கள் ஆதரவினை திரட்டிவிட முடியாது என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments