பாகிஸ்தானில் 4 ஆணழகர்கள் உயிரிழந்ததன் எதிரொலியாக ஆணழகர் போட்டிகளை நடத்துவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும் போட்டிகளில் வெற்றி பெறவும் பல குறுக்கு வழிகளை வீரர்கள் பயன்படுத்தியதால் பாகிஸ்தானில் கடந்த 17 நாட்களில் 4 ஆணழகர்கள் உயிரிழந்துள்ளனர்.
உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்காக அதிக அளவில் ஸ்டீராய்டை பயன்படுத்தியதன் காரணமாகவே அவர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
கடந்த தெற்காசிய ஆணழகர் சம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்ற ஹமீட் அலி மற்றும் உமியுன் குர்ஹாம் ஆகியோர் இந்த மாதத்தின் தொடக்கத்தில் உயிரிழந்தனர். தொடர்ந்து அடுத்த வாரத்திலேயே மிஸ்டர் பாகிஸ்தான் பட்டம் வென்ற அர்ஷர் உயிரிழந்தார். மேலும் மற்றொரு மிஸ்டர் பாகிஸ்தான் பட்டம் வென்ற மொஹமட் ரிஸ்வான் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


0 Comments