Subscribe Us

header ads

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் வாரிசுரிமைக்கு இடமே இல்லை - அமைச்சர் ஹக்கீம்


அபு அலா -

நாட்டிலுள்ள அனைத்து கட்சியிகளுக்கும் வாரிசுரிமை பரம்பரை உள்ளது ஆனால் இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு மாத்திரம் வாரிசுரிமைக்கு இடமே இல்லை என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நகர திட்டமிடல், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டுக்கான இளைஞர் படையணி உறுப்பினர்களை நேற்று (12) பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் சந்தித்து உரையாற்றும்போது மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

இக்கட்சிக்குள் வாரிசுரிமை என்று யாரவது ஒருவரை காட்ட முடியுமாக இருந்தால் யாராவது காட்டலாம். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் வாரிசுரிமை அரசியல் என்ற பேச்சிக்கு ஒருபோதும் இடமேயில்லை.

நான் சிலருக்கு அதை ஆகாது என தடுத்தும் வைத்துள்ளேன், மேடையில் உள்ளவர்களுக்கும் அந்த ஆசைகள் இருந்தால் அதை தடுக்க முயற்சி செய்ய்யுங்கள் அத்துடன் இந்த கட்சிக்குள் தன்னுடைய குடும்பத்தினரை வாரிசுரிமையாக நுழைக்க எண்ணுபவர்கள் அதனை இன்றிலிருந்தே அகற்றிவிடவேண்டும். அப்படி யாராவது செய்ய வருவார்களானால் இந்த கட்சிக்குள் அவர்களுக்கு எந்த விதமான பாரம்பரிய அங்கீகாரமும் கிடையாது என்றார்.


Post a Comment

0 Comments