இன்று, சூரிய கிரகணம்..!
இலங்கை நேரப்படி 9/3/2016, அதிகாலை 4.49 மணி முதல், காலை 9.08 மணி வரையில் நீடிக்கும்...
சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் சந்திரன் கடக்கும்போது, அது பூமியில் இருந்து சூரியனை மறைக்கும். இது சூரிய கிரகணம்.
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான நேர்கோட்டை பூமி கடக்கும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைப்பது சந்திர கிரகணம்.
சூரியனைவிட சந்திரன் 400 மடங்கு சிறியது. ஆனால், பூமியிலிருந்து 400 மடங்கு துாரத்தில் சூரியன் இருப்பதால், அதன் ஒளியை சந்திரன் மறைக்கிறது.
கிரகணத்தை நேரடியாகப் பார்த்தால், கண் பார்வைக் குறைவு அல்லது முழுமையாக பார்வைத்திறன் பறிபோகவோ வாய்ப்பு உள்ளது.
கிரகணத்தின் போது, சூரியனை வெறும் கண்களால், அதாவது கண்ணுக்கு பாதுகாப்பு லென்ஸ் இல்லாமல் நேரடியாக பார்க்கக் கூடாது.
சூரிய கிரகணத்தில், வெளித் தெரிவது, 1% ஒளி மட்டுமே. ஆனால், அது, 10,000 மடங்கு, சந்திர ஒளியைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்தது.
அல்ட்ரா வயலட் கதிர்களின் அலைநீளம், (wavelength) 380-1400nm, தாக்கும்போது, கண்களின் விழித்திரை பாதிக்கப்படுகின்றது.
வேதிம மற்றும் வெப்பநிலை சார்ந்த விழித்திரை இழப்பு (Photo chemical thermal
retinal damage), கிரகணத்தின் போது ஏற்படும் தற்காலிகமான / நிரந்தரமான விழித்திரை சேதம், எவ்வளவு நேரம் பாதுகாப்பின்றி கிரகணக் கதிர்களை நேரடியாக பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது.
கிரகணக் கதிர்கள், முற்றிலும் வலியே தெரியாத பார்வை இழப்பை ஏற்படுத்தும் என்பதும், அறிவியல் உண்மை.
Retinal damage, எனப்படும் நிரந்த விழித்திறன் இழப்பிற்கு மருத்துவ சிகிச்சை பயனளிக்காது என்கின்றனர் கண் சிகிச்சை நிபுணர்கள் (Retinal surgeons).
நாம் அன்றாடம், பயன்படுத்தும், Sun glasses / Cooling glasses - கருப்புக் கண்ணாடிகள், கிரகண கதிர்வீச்சுக்கு எந்தவித பாதுகாப்பும் தராது.
அதே போன்று, X-ray படங்கள், அல்லது ஃபோட்டோ நெகடிவ் படங்கள் மூலமாக, கிரகணத்தைப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
பாதுகாப்பு கண்ணாடிகள்(Eclipse glasses) கொண்டு தான் பார்க்க வேண்டும். வெல்டர்கள் பயன்படுத்தும், 14 வெல்டர் கண்ணாடிகள், பாதுகாப்பை தரும்.
கிரகணமும், கர்ப்பமும் சில நம்பிக்கைகள் மற்றும் அறிவியல் விளக்கங்கள்..
கர்ப்பிணிப் பெண்கள், கிரகணத்தின் போது, வெளியே வரக்கூடாதா?
மற்ற அனைவரையும் போல, தகுந்த பாதுகாப்பு கண்ணாடிகளோடு வரலாம்.
சூரிய கிரகணத்தின் போது, கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வந்தால் குழந்தை குறைபாட்டுடன் பிறக்கும்?
அறிவியல் பூர்வமாக, எந்த ஆதாரமும் இல்லை.
கத்தி, கத்திரி போன்ற கூர்மையான ஆயுதங்களை வைத்திருக்க கூடாது..??
இரத்த அழுத்த வேறுபாடுகளால் பாதுகாப்பு கருதி தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது
உணவை உண்ணக்கூடாதா??
இரத்த அழுத்த வேறுபாடுகள், கிரகணத்தின் போது ஏற்படும். இதனால் செரிமானம் பாதிக்கப்படலாம் என்ற அறிவியல் உண்மை இதில் உள்ளது.
கிரகணத்தால் (Birthmark) தழும்பு வர வாய்ப்பு உள்ளது?
அறவே இல்லை.
ஏனையவர்க்கு எந்த % பிறப்புக்குறிகள் தோன்றுமோ அதே அளவில்தான், இங்கும் உள்ளது.
தக்க பாதுகாப்புக்களோடு சூரிய கிரகணத்தை அவதானியுங்கள்.
நீங்கள் காணும் சூரிய கிரகணக் காட்சியை படம் பிடித்தால் எமக்கும் அனுப்பி வையுங்கள்..
0 Comments