Subscribe Us

header ads

அரசியல் குழிபறிப்புகளுக்கு மத்தியில் கால்தடுக்கி விழுந்தது சிறுவிடயமே! உதய கம்மன்பிலவின் சமாளிப்பு


அரசியலில் தனக்கெதிரான குழிபறிப்புகளுக்கு மத்தியில் மேடையில் கால் தடுக்கி விழுந்தது ஒருசிறு விடயமே என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேற்று கூட்டு எதிர்க்கட்சி சார்பில் கொழும்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதற்காக மேடையில் நடந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எதிர்பாராதவிதமாக தடுக்கி விழுந்திருந்தார்.

இதுகுறித்து சிங்கள பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், நான் மேடையில் உரையாற்ற வரும்போது ஏராளமான பொதுமக்கள் ஆர்ப்பரித்து என்னை உற்சாகப்படுத்தினர்.

அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்களை நோக்கி கையெடுத்துக் கும்பிட முயன்றபோது எதிர்பாராதவிதமாக நான் தடுக்கி விழுந்து விட்டேன்.

ஆனாலும் நான் ஒன்றும் கற்கள், முட்களின் மீது தடுக்கி விழவில்லை. மேடையில் விரித்திருந்த கம்பளத்தின் மீதே விழுந்தேன்.

அரசியலில் எனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குழிபறிப்புகளுடன் ஒப்பிடும்போது இது ஒன்றும் பெரிய விடயமில்லை என்றும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments