சதொச
நிறுவனத்துக்கு சொந்தமான பொருட்கள் அனுராதபுர மாவட்ட தனியார் கடைகளில் விற்கப்பட்டமை
தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென
கெக்கிராவை பொலீஸாருக்கு அமைச்சர் றிசாத்
பதியுதீன் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு சதொச களஞ்சியசாலையிலிருந்து,
கெக்கிராவை சதொச விற்பனை நிலையத்துக்கு
எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி பொருட்கள் மற்றும் பண்டங்கள் அங்கு போய்ச் சேராமல்,
அனுராதபுர மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார் கடைகளில் விற்கப்பட்டு வந்ததை
அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சதொசவுக்கு சொந்தமான இந்த பொருட்கள், எவ்வாறு
தனியாரின் கரங்களுக்குள் சென்றடைந்தமை குறித்து ஆராய்ந்த அதிகாரிகள், அந்தக் களவில்
ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து, கெகிராவை பொலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
0 Comments