Subscribe Us

header ads

நம்மூரு பஸ் மாதிரி வராதுப்பா - சூரியின் அம்மா



இந்த உலகத்தில் பிறந்த எல்லா ஜீவராசிகளுக்கும் அம்மா என்றால் அது ஒரு தனி பாசம்தான். அந்த மாதிரிதான் நடிகர் சூரிக்கும். இவருக்கு அவரது அம்மா என்றாலே கொள்ளை பிரியம். 

சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சூரி, இன்று தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியன்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். படப்பிடிப்புக்காக பல்வேறு நாடுகள் பயணித்திருந்தாலும், இதுவரை சூரி தனது அம்மாவை ஒருமுறை கூட விமானத்தில் அழைத்துச் சென்றதே கிடையாதாம். 

தற்போது முதன்முறையாக அவரது அம்மாவை விமானத்தில் அழைத்துச் சென்று அழகு பார்த்துள்ளார் சூரி. இவரும், இவருடைய அம்மாவும் விமானத்தில் பயணித்தபடி ஒரு போட்டோவை சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

விமானத்தில் பயணம் செய்த அனுபவம் குறித்து அவரது அம்மா சூரியிடம் என்னதான் இருந்தாலும் நம்மூரு பஸ் மாதிரி வராதுப்பான்னு சொன்னதும் சூரியும், பைலட்டும் தெறிச்சிட்டாங்களாம்.

Post a Comment

0 Comments