நீதிமன்றை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் இருக்கும் ஞானசார தேரரினால் நேற்றைய தினம் நவம் பௌர்ணமியை முன்னிட்டு சிறைச்சாலையில் சமய நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சமய நிகழ்வின் போது ராவணா பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரரின் தர்ம உபதேசனைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அங்கு வந்த சிறைச்சாலைகள் நிர்வாக குழுவினர் இந்த நிகழ்வை இடைநிறுத்தியுள்ளனர்.
எனினும் இதன்போது குறிப்பிட்ட நிகழ்வானது இடைநடுவில் நிறுத்தப்பட்டமை தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளரும், சிறைச்சாலை ஊடகப் பேச்சாளருமான துசார உபுல்தெனிய சிறைச்சாலை அதிகாரிகளிடம் அறிக்கையை கோரியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் வேறொரு தேரர் மூலம் தொடர்ந்து பௌர்ணமி தின சமய நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் தரப்பு தெரிவித்துள்ளது.


0 Comments