முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சாஸ்திர பலத்தை பயன்படுத்தி தான் இருக்கும் வரை ஆட்சி பலத்தில் இருந்துகொண்டு பின்னர் தனது மகனை ஆட்சியில் அமர்த்த திட்டமிட்டதாக அப்போதய அவரின் ஆஸ்தான ஜோதிடர் சுமனதாச குறிப்பிட்டார்.
ஊடக மாநாடு ஒன்றில் பிரதி அமைச்சர் ரஞ்ஞன் ராமநாயக்க அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் இதனை குறிப்பிட்டார்.
தான் இறக்கும் வரை ஆட்சியில் இருக்கவேண்டும் என மஹிந்த விரும்பியதாகவும் அதன்பின்னர் தனது மகனுக்கு ஆட்சியை கொடுக்க வேண்டும் என அவர் விரும்பியதாகவும் சாஸ்திர பலத்தில் அதனை அடைய அவர் முற்பட்டதாகவும் குறிப்பிட்ட மஹிந்தவின் முன்னாள் ஆஸ்தான ஜோதிடர் சுமனதாச ரத்தரங் என அழைக்கப்படும் ஒரு சோதிடரை மஹிந்த அழைத்துவந்து மைத்ரி ஒழிந்துபோக செய்வினை செய்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments