Subscribe Us

கை, கால் குடைச்சல், மூட்டு வலிக்கு முடக்கத்தான் மூலிகை ரசம்


ஈரம் மிகுந்துள்ள இடங்களில் வேலிகள் மற்றும் பெருஞ்செடிகளின் மேல் பற்றிப் படரும் தாவரம். மாற்றடுக்கில் அமைந்த பல்லுள்ள இலைகளையும், கோணங்களில் அமைந்த இறகு போன்ற காய்களையும் கொண்டது. இன்றைக்கும் நமது கிராமப் பகுதிகளில் முடக்கற்றான் கீரை ஒரு சிறந்த உணவாகப் பயன்படுத்தப்படுகின்றது.


முடக்கற்றான், முடக்கறுத்தான், மோதிக் கொட்டன் போன்ற பெயர்களும் வழக்கத்தில் உண்டு. இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள் இலை, வேர், சிறுநீர் பெருக்கும், மலமிளக்கும், தும்மலுண்டாக்கும், பசியைத் தூண்டும், வாத நோய்களைப் போக்கும், உடலுக்குப் பலம் தரும், கிரந்தி, கரப்பான் போன்ற நோய்களையும் குணமாக்கும். 



முடக்கறுத்தான் இலைகளைப் பசுமையாகச் சேகரித்துக் கொண்டு ரசம் வைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர கை, கால் குடைச்சல், மூட்டு வலி தீரும். தேவையான அளவு இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டி வர கீல்வாதம், வீக்கம் குணமாகும். ஒரு கைப்பிடி அளவு இலையை லிட்டர் நீருடன் சேர்ந்து, அவித்து, ரசம் செய்து சாப்பிட மலச்சிக்கல், குடல் வாயு கலையும். ஒரு கைப்பிடி அளவு முடக்கறுத்தான் இலைகளை நீரில் கழுவி சுத்தம் செய்து,  1 லிட்டர் புளித் தண்ணீரில் போட்டு, 1 தேக்கரண்டி அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும். 



புளியின் வாசனை போனவுடன், தேவையான அளவு மிளகு, சீரகம், சிறிதளவு பெருங்காயம், மிளகாய் வற்றல் ஆகியவற்றை நன்றாக அரைத்து ரசத்துடன் சேர்க்கவும், மேலும் 3 பல் பூண்டை ஒன்றிரண்டாக நசுக்கி ரசத்துடன் சேர்க்கவும். நன்கு பொங்கியதும், தேவையான அளவு கடுகு சேர்த்து, தாளித்து இறக்க வேண்டும். இதுவே முடக்கறுத்தான் ரசம், 1 டம்ளர் அளவு குடித்து வர மூட்டுவலி, கை, கால் வலி தீரும். 



முடக்கறுத்தான் தோசை சாப்பிட்டதுண்டா? தோசை செய்ய தேவையான அளவு அரிசியுடன், 1 கைப்பிடி அளவு முடக்கறுத்தான் இலைகளைச் சேர்த்து நன்கு அரைத்து உடனடியாகத் (புளிக்காமல்) தோசையாக செய்து சாப்பிடலாம். இதனால் உடல்வலி தீரும்.

Post a Comment

0 Comments