Subscribe Us

அல் பாக்தாதியை கொலை செய்யும் நபரை திருமணம் செய்து கொள்வேன் எகிப்து நடிகை அறிவிப்பு


ஈராக் - சிரியா நாட்டின் சில பகுதிகளை பிடித்து தங்கள் கட்டுபாட்டில் வைத்துள்ள ஐ.எஸ் போராளிகள் அதனை இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ள. ஐஎஸ்ஐஎஸ்  அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி. ஐ.எஸ். போராளிகள்  உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறாகள். குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவர்களை பற்றிய அச்சம் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் எகிப்தை சேர்ந்த பிரபல நடிகையான எல்ஹாம் ஷாஹின்(55) கெய்ரோவில் இன்று பத்திரிகையாளர்கள் மத்தியில் பேட்டி அளித்தார் அப்போது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதியை கொலை செய்யும் நபரை நான் திருமணம் செய்து கொள்வேன் என அறிவித்தார். தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சினிமா படங்களில் நடித்துள்ள ஷாஹின் தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றை பெற்றுள்ளார்.ஷாஹினுக்கு 55 வயது ஆவது குறிப்பிடதக்கது.

அவர் கூறியதாவது:-

ஐ.ஸ் போராளிகள் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியை கொலை செய்யும் நபரை நான் திருமணம் செய்து கொள்வேன். அவர் யாராக இருந்தாலும் சரி, எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் கவலை இல்லை. திருமணத்திற்கான அனைத்து செலவையும் நானே ஏற்பேன்.  அவர் கனவிலும் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு மகிழ்ச்சிகரமான தேனிலவை கொண்டாடலாம். அவர் விரும்பும் இடத்திற்கு நான் அழைத்து செல்வேன். அவரின் சேவகியாக இருப்பேன். பாக்தாதியை கொலை செய்தால் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் அமைதி திரும்பும் என கூறினார். 

Post a Comment

0 Comments