Subscribe Us

கற்பு நெறியை மாத்திரமன்றி பாலுணர்வு ஆளுமையையே காவு கொள்ளும் முறை கேடான உறவுகள்.

கற்பு நெறி என்பது பெண்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமாக கருதப்படுகின்றதோ அதேயளவு ஆண்களுக்கும் முக்கியமானது.

இயல்பான எதிர்பால் கவர்ச்சியினை முறையாக கையாளுகின்ற வரை முறைகளை இனிய இஸ்லாமிய வாழ்வு நெறி காட்டித் தருகின்றது.

முறை கேடான எதிர் பால் கவர்ச்சியின் மூலம் இளைஞர்களோ, யுவதிகளோ கற்பு நெறி தவறி விடலாம்.

அதே போன்றே முறை கேடான ஓரினகவர்ச்சியின் மூலம் இளசுகள் கற்பு நெறி தவறலாம்.

என்றாலும், இயற்கையான எதிர்பால் கவர்ச்சியின் மூலம் கற்பு நெறி தவறும் பருவ வயதினர் இயற்கைக்கு முரணான ஓரின தொடர்பாடல்கள் மூலம் தமது கற்பு நெறியை மாத்திரமன்றி ஆண்மையை அல்லது பெண்மையை முற்று முழுதாக இழந்து விடலாம்.

நவ யுகத்தில் ஊக்குவிக்கப்படுகின்ற ஒரு பாலின உறவுகள், பல்வேறு கொடிய பாலியல் நோய் நொடிகளுக்கு காரணமாவதைப் போலவே, வாழ்க்கையில் நாம் இழக்கக் கூடாதவற்றை இழந்து தவிப்பதற்கு வழி கோலும் என்பதில் சந்தேகமில்லை.

பல்வேறு சமூக பொருளாதார கல்விக் கட்டமைப்பு காரணிகளால் இளம் வயதில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள முடியாத அல்லது துணியை பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலைகளில் முறைகேடான பாலியல் தொடர்புகள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.

ஒரு பாலின நீண்டகால வதிவிட விடுதிக் கற்கைகள் இயற்கைக்கு முரணான பாலினக் கவர்ச்சிகளுக்கு வழி வகுப்பதால் அவற்றிற்கான மாற்றீடுகள் அவசியம் முன்வைக்கப் படல் வேண்டும்.

நவ யுகத்தில் சமூக ஊடகங்கள் வழங்கும் சுதந்திரமான தொடர்பாடல்கள், சமூக தலத்தில் நட்பு வட்டங்களிற்கு உள்ள சௌகரியமான கட்டுக் கோப்புக்களற்ற சுதந்திரங்கள் பருவ வயதினரின் இயற்கையான பாலுணர்வு நடத்தைகளை காவு கொள்வதற்கான அதிகரித்த சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.

பதின்ம வயதில் ஒரு முறை ஏற்படுகின்ற பிழையான தவறான அல்லது முறைகேடான உறவு ஒருவரது ஆளுமையை முற்று முழுதாக மாற்றி விடுகின்ற அபாயத்தை கொண்டுள்ளதால் இது குறித்த விழிப்புணர்வை பாடசாலைகள், மஸ்ஜிதுகளூடாக பெற்றார்கள்,மாணவர்களுக்கு ஏற்படுத்துதல் கட்டாயமாகும்.

உண்மையான நட்பு என்ற பெயரில் ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள் அறிந்தோ அறியாமலோ உங்களை அணுகுவதற்கான சந்தர்ப்பங்களை வழங்காதீர்கள்.

-Inamullah Masihudeen-

Post a Comment

0 Comments