Subscribe Us

header ads

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்தி வைக்க வேண்டாம்: பெப்ரல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்தி வைக்க வேண்டாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெபரல் அரசாங்கத்திடம் மீண்டும் கோரியுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் துரித கதியில் நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
அதிகாரிகளின் கீழ் இயங்கி வரும் உள்ளூராட்சி மன்றங்களில் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் போன்ற பகுதிகளின் உள்ளூராட்சி மன்றங்களில் இந்த நிலையை தெளிவாக அவதானிக்க முடியும்.
சில உள்ளூராட்சி மன்றங்கள் இரண்டு ஆண்டுகளாக பொதுமக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு இன்றி நிர்வாகம் செய்யப்படுகின்றது.
இவ்வாறான நிலைமையானது மக்களின் ஜனநாயக உரிமை மீறலாகவே கருதப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்து விரைவில் தேர்தலை நடாத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments