Subscribe Us

header ads

பெண்ணே! கொஞ்சம் நில்! சொல்வதைக் கேள்!



உன்னைப் பார்க்கையில் உள்ளம் பதறுதே!
ஊரில் இருப்பவர்கள் கவனங்கள் சிதறுதே!

உன் சிந்தனை என்ன செத்து விட்டதா?
உன் மண்டைக்குள் என்ன மண் நிறைந்து விட்டதா?
அல்லது உன் சிந்தை தான் களங்கிப் போய் விட்டதா?

மனித இனத்துக்கே ஆறறிவைத் தானே அள்ளாஹ் படைத்தான்!
உன்னறிவை மட்டும் எங்கே தொலைத்தாய்?
மயக்கும் மனதுக்கு அடிமையாகி விட்டாயா?
மாயக்கள்வன் ஷைத்தானை மனதுக்குள் குடியமர்த்தி விட்டாயா?

அறிவை அடக்க உணர்வுகளுக்கு அனுமதிக்காதே!
உணர்வுகளைக் கட்டுப்படுத்த அறிவுக்கு வழிவிடு!


நீ

ஓர் அமானிதம்!

ஓர் அரிய பொக்கிஷம்!

உன் மன்னவனுக்கான மகாராணி!

மறைத்து வைக்கப்பட வேண்டிய மாபெரும் அன்பளிப்பு!

கணவன் மட்டுமே நுழையக் கூடிய அதிஷ்டமாளிகை!

அந்நியன் கண்ணுக்கு அணல் கக்கும் சூரியன்!

கணவனுக்கு மட்டுமே குளிர்ச்சி தரும் பால் நிலவு!🌕
ஒருவனுக்காக படைக்கப்பட்ட ஒப்பற்ற ஓவியம்!

மறைத்து வைக்க வேண்டிய விலைமதிப்பில்லா மாணிக்கம்!


இது ஏன் உனக்கு புரியவில்லை?
மாயை உன் மனதுக்கு திரையிட்டு விட்டதா?
ஆடை குறைத்து அவ்ரத் காட்டுகிறாயே!
இறுக்கமான உடை தரித்து நிர்வாணமாக திரிகின்றாயே!
அலங்காரங்களை எல்லாம் அதிகமாக செய்து அந்நிய கண்களுக்கு விருந்தோம்பல் வைக்கிறாயே!
கண்டவன் எல்லாம் அணுவணுவாய் ரசிக்க அனுமதியளிக்க உனக்கு யார் அனுமதி தந்தது?

மலிவான, காலாவதியான பொருட்கள் தானே வீதியோரங்களில் விற்பனைக்கிடப்படும்!
உன்னை நீயே ஏலத்தில் விட
உன் மனது உனக்கிடம் கொடுக்குதா?
நீ என்ன அவ்வளவு தரமற்ற பொருளா?
உன் தரமென்ன என்று உனக்குத் தெரியவில்லையா?
உன் கண்ணியம் காக்க உன்னால் முடியவில்லையா?

மஹர் தந்து உன்னை மணக்க வருபவனுக்கு நீ கொடுக்கப் போகும் சீதனம் என்ன?
அத்தனை தெரு வண்டுகளினதும் கண்களுக்கும் எண்ணங்களுக்கும் தீணியிட்ட உன் மாசுபடிந்த உடலையா பரிசளிக்கப் போகிறாய்?

அவமானம்! பெண்ணே !
இது அநியாயம்!
உணர்ந்து கொள் !

இவ்வளவு நாளும் புரியாமல்
தவறிழைத்தாய்!
இதயத்தால் உணர்ந்து
இறைவனிடம் மன்னிப்பு கேள்!
இனி ஒரு கணம் தாமதிக்காதே!
இன்றே திருந்தி விடு!

இனிய என் சோதரியே!
இனிக்கும் இல்லறமும்
இறையருளும்
இம்மையிலும் மறுமையிலும்
இறைவன் உனக்கருள வேண்டி
விடை பெறுகின்றேன்!
இவள் என்றும் உன் நலவை நாடும் சகோதரி!
Binth Hassan Az
31.08.2015~*~

Post a Comment

0 Comments