பெரும்பான்மை இனத்தவரை போன்றே சிறுபான்மை இனத்தவருக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக விளையாட்டு இணையத்தை அங்குரார்பணம் செய்யும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு - முகத்துவாரம் முத்துவெல்லை விளையாட்டு மைதானத்தில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேஷன் தலைமையில் நடைபெற்றது.
இனவாதம் மற்றும் மதவாதம் பேசிய சிலர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலர் எதிர்வரும் வாரங்களில் சிறைக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.ரி.குருசாமியின் ஆலோசனைக்கு அமைய, அவரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதேவேளை, விளையாட்டு நிகழ்வுகளை நடாத்தி இளைஞர்களை ஒன்றிணைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஜனநாயக மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி சுதர்ஷன் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments