Subscribe Us

header ads

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு: நாய்களுக்குத் திருமணம்!


உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில் காதலர் தினத்தை கொண்டாடக் கூடாது. அது கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறது என்று இந்து முன்னணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பூர் மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவித்திருந்ததால். அதற்கு போலீசார் தடை விதித்து இருந்தனர்.
ஆனால், தடையை மீறி மாநகர் மாவட்ட இந்து முன்னணி பொதுச்செயலாளர் சேவூகன் தலைமையில் தொண்டர்கள், நாய்களுக்குத் திருமணம் செய்து வைத்தனர். இதற்காக 2 நாய்களை கொண்டு வந்த அவர்கள் தாம்பூலத் தட்டில் பழங்கள் வைத்து, சடங்குகள் செய்து தாலிகட்டி, மோதிரம் அணிவித்தனர்.

Post a Comment

0 Comments