அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில், கடந்த 2013ஆம் ஆண்டு லுகாஸ் கிளாக் என்ற 7 மாத குழந்தை, மூளை நோய் காரணமாக உயிரிழந்துள்ளது.
பின்னர் லூகாசின் தாய், அவரது உடல் உறுப்புக்களை தானமாக அளிக்க முன்வந்தார்.
இதயநோயால் அவதிப்பட்டு வந்த, 4 வயது நிரம்பிய ஜோர்டான் ட்ரேக் என்ற சிறுமிக்கு லூகாசின் இதயம் பொருத்தப்பட்டது.
சிறுமி ஜோர்டன் லூகாஸ் இதன் மூலம் உயிர் பெற்றார்.
சமீபத்தில் அந்த சிறுமியை லூகாசின் தாயார் சந்தித்தார். அப்போது மருத்துவர்கள், சிறுமிக்குள் துடித்துக் கொண்டிருக்கும் லூகாசின் இதயதுடிப்பை ஸ்டெதஸ்கோப் மூலம் அவரது தாயை கேட்க வைத்தனர். மகனின் இதயதுடிப்பை கேட்டு தாய் கதறி அழுதார்.
இந்த காணொளி அனைவரையும் நெகிழவைத்துள்ளது.


0 Comments