அமைச்சர்களை மதிக்காது வரம்பு மீறி செயற்பட்டு வரும் அமைச்சின் செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைசார் அமைச்சரிடம் அறிவிக்காது தங்களது சுய விருப்பின் அடி;பபடையில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் அரசாங்கம் நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கி வருவதாகவும் இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு வரம்பு மீறி எதேச்சாதிகாரப் போக்கில் தீர்மானங்களை எடுத்த அமைச்சின் செலயாளர்கள்; சிலருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் மக்களின் நலனை முதனிலைப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் நலனை முன்னிலைப்படுத்தாமல் செயற்படும் அமைச்சின் செயலாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.


0 Comments