புத்தளம் பாலாவியிலிருந்து கல்பிட்டிக்கு
செல்லும் பிரதான பாதையில் சந்திக்கும் முதலாவது பெரிய பாலம் அரையும் குறையுமாக
முற்றுப்பெறாமல் நீண்டகாலமாக இருப்பதால் பிரயாணம் செய்வோரின் நிலை பயங்கரமாகவுள்ளதுடன்
பாரிய விபத்துக்கள் ஏற்பட்டு மரணங்களும் சம்பவித்துள்ளன.
பிரதான பாதையிலிருந்து சற்று விலகி இப்பாலம் அமைக்கப்பட்டு இரு
ப்பாதாலும் அரைகுறையாக கைவிடப்பட்டுள்ளமையாலும்
அநேகமான விபத்துக்கள் இடம்பெறுவதாக அறியமுடிகிறது. வீதி அபிவிருத்தி அதிகார சபை
இப்பாலத்தை முழுமையாக செய்து முடிக்காமல் சில வளைவு சமிஞ்சை பலகைகளை நாட்டியதுடன்
தங்களது பணி முடிந்துவிட்டது என எண்ணியிருப்பாதாகவே கருதவேண்டியுள்ளது.
சந்திரிக்கா அரசின் நுரைச்சோலை
அனல் மின் திட்டத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இப்பாதை புனர்நிர்மாணம் கட்டம் கட்டமாக
கல்பிட்டி வரை காபட் பாதை அமைக்கப்பட்டும் இதுவரை இப்பாலம் நிறைவு பெறாமல் இருப்பது ஏன் என
தெரியவில்லை. முன்னால் ஜனாதிபதி நுரைச்சோலை மின் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை
திறந்து வைக்க வருகை தந்த சமயம் இப்பாலத்தை கட்டிமுடிக்கப்பட்ட புதிய பாலமாக
காட்டுவதற்கு அதிகாரிகள் பலத்த பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இப்பாலத்தை கட்டமுடியாது என்றும் நாளுக்கு நாள் புதையுண்டு வருவதாகவும் சில
தோஷங்களை செய்தால்தான் இதனை கட்டமுடியும் என ஒரு சோதிடர்
கூறியதாகவும் வதந்திகள் பரவியது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இப்பாலத்தில்
ஏற்பட்ட வாகன விபத்தில் என் நண்பரான சைபுல்லாஹ் அவர்கள் படுகாயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதத்தின் பின் வபாத்தானார்கள்.
எனவே
இன்னுமொரு உயிரை இப்பாலம் காவு கொள்ளமுன் அரசும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இவ்விடயத்தில்
கவனமெடுத்து பாலமும் பாதையும் சீரமைக்கப்படுவதன் மூலம் மக்கள் பயன் பெறுவதோடு
பெறுமதி மிக்க உயிர்களும் காப்பாற்றப்படும்.
எஸ். எம். மணாப்தீன்
செயலாளர்
மக்கள் சேவை மன்றம்





0 Comments