Subscribe Us

header ads

சிங்கலே தொடர்பாக கருத்து தெரிவிப்பது தேவையற்ற விடயம் - ஜனாதிபதி

'தெயட பன தெமு' என்ற பெயரில் நேற்று கண்டியில் சிங்கலே அணியினரது பேரணி தொடர்பாக கருத்து தெரிவிப்பது, தேவையற்ற விடயம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பி.பி.சி சர்வதே ஊடக சேவையில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் இது போன்ற அமைப்புகள் பற்றி மௌனமாக இருக்க முடியுமா? மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்படும் பல விமர்சனங்கள் தொடர்பாக குறித்த ஊடகம் ஜனாதிபதியிடம் கேள்விகளை எழுப்பியது.

இதன் போது பதில் அளித்த ஜனாதிபதி, 'நான் நாட்டில் தலைவானக கருத்து தெரிவிக்கும் போது, நாடு மற்றும் மக்கள் தொடர்பான முக்கிய விடயங்கள் மாத்திரமே எனக்கு முக்கியம்' என்றார். 

நேற்று கண்டி ஸ்ரீதலதா மாளிகை அருகில் சிங்கலே அணியினரது பேரணி வந்த போது, தேசிய கொடியல்லாத கொடிகளை தலதா மாளிகைக்கு எடுத்து செல்ல அனுமதிக்க முடியாது என போது காவல் துறையினர் கூறியுள்ளனர்.

இதன் போது காவல் துறையினருக்கும் சிங்கலே அணியினருக்கும் இடையில் முறுகள் நிலை ஏற்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments