Subscribe Us

பேருவலை வர்த்தகருடைய நீலக்கல் இரத்தினக்கற்களுக்குள் சேராது கொழும்பு இரத்தினக்கல் ஆராய்சி நிறுவனம்

இதுவரையில் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நீலக்கல் தம்மிடம் இருப்பதாக, பேருவலையைச் சேர்ந்த இரத்தினக்கல் வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் ஊடகங்களுக்கு இதனைக் கூறினார்.
எனினும் அவரிடம் இருக்கும் கல் இரத்தினக்கற்களுக்குள் சேராது என்று, கொழும்பு இரத்தினக்கல் ஆராய்சி நிறுவனத்தின் பிரதான நிபுணர் அசான் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
480 கிராம் எடை கொண்ட கறுநீலமான இந்த கல் சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு கிடைத்துள்ளது.
தம்புல்ல – எலஹெர பிரதேசத்தில் இந்த கல் பெறப்பட்டிருந்தது.


எவ்வாறாயினும், உலகிலேயே மிகப்பெரிய நீலக்கல் தம்மிடமிருப்பதாக, ரத்தினபுரியைச் சேர்ந்த இரத்தினகல் வர்த்தகர் ஒருவர் அறிவித்துள்ளதுடன், குறித்த கல்லை 300 மில்லியன் டொலர்களுக்கு  விற்பனை செய்ய முயற்சிப்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments