தெமட மவுன்ட் மேரி பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் தாய் மற்றும் மகள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு 9 மணியளவில் வீதி கடவையில் குறித்த இருவரும் வீதியை கடக்க முற்பட்ட போது சிற்றூர்தி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த வாகனத்தை செழுத்தியது 15 வயதுடைய சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது.
கடும் காயங்களுடன் குறித்த இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அனுமதிக்கும் போது அவர்கள் உயிரிழந்துவிட்டதாக மருத்துமனை பேச்சாளர் தெரிவித்தார்.
உயிரிழந்த பெண்ணின் வயது 47 எனவும், சிறுமியின் வயது 10 என காவற்துறையினர் தெரிவித்திருந்தனர்.
சிற்றூர்தியை செழுத்திய சிறுவனை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை இன்று இடம் பெறவுள்ளது.
இன்னிலையில் , விபத்து நிகழ்ந்ததை அடுத்து விபத்தை ஏற்படுத்திய குறித்த சிறுவனுக்கு பதிலாக வேறொருவர் காவற்துறையில் சரணடைந்ததால் தெமட கொட காவற்துறையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
எனினும் , காவற்துறையினர் குறித்த சிறுவனை கைது செய்துள்ளனர்.


0 Comments