ஆஸ்திரியாவில் மருத்துவர் ஒருவர் அகதிகளுக்கு மருத்துவம் செய்ய மறுத்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
வியன்னாவில் மருத்துவராக பணியாற்றி வருபவர் Dr Unden, இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அகதிகளுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது பேஸ்புக் பக்கத்தில், பெயர், பிறப்பிடம் தெரியாத மக்களுக்கு தம்மால மருத்துவம் பார்க்க முடியாது என பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரியா மருத்துவ சட்டத்தின்படி நோயாளிகள் எவருக்கும் மருத்துவ உதவி வழங்க மருத்துவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மறுக்க கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே அவரது கருத்துக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மருத்துவர் Unden தனது கருத்தில் உறுதியா இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மருத்துவர் Unden தொடர்ந்து பலமுறை அகதிகளுக்கு எதிராகவும், குடிபெயர்ந்த மக்களுக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார்.
முன்னர் ஒருமுறை குறிப்பிட்ட சில அரசியல் கட்சி சார்ந்த நபர்களுக்கு தாம் சிகிசை அளிப்பதில்லை எனவும் தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஆஸ்திரியா பெண்களுக்கு எதிராக அங்குள்ள தனியார் ஊடகம் ஒன்றில் கருத்து கூறியதற்கு பெண்கள் மத்தில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக நீதிமன்றத்தில் அபராதமும் செலுத்தியுள்ளார்.
அகதிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்க ஐரோப்பா முழுவதும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகையில்,
மருத்துவர் Unden போன்றவர்களின் கருத்துகள் கண்டனத்துக்கு உரியது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவில் இந்த ஆண்டு மட்டும் 850,000 அகதிகள் வந்து சேரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments