( முஹம்மட் றின்ஸாத் )
நேற்றைய தினம் சுமார் 6.00 மணியளவில் சாய்ந்தமருது 2ஆம் பிரிவில் கடற்கரை வீதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் உள்ள பெறுமதியான கம்பி , நெட் வலைகளை இளைஞர் பாராளமன்ர உறுப்பினர் தில்ஷாத் தலைமயில் பொது மக்கள் மற்றும் கல்முனை மாநகர சபைக்கு தெரியாமல் எடுத்துச் சென்றுள்ளனர் .
இதனைப்பற்றி தெரிய வருவதாவது :
நேற்றைய தினம் சுமார் 6.00 மணியளவில் இளைஞர் பாராளமன்ர உறுப்பினர் தில்ஷாத் மற்றும் அவரது சகாக்கள் என பலர் சாய்ந்தமருது 2ஆம் பிரிவில் கடற்கரை வீதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் உள்ள பெறுமதியான கம்பி நெட் வலைகளை அறுத்து அதனை வேறு இடத்திற்கு சட்ட விரோதமான முறையில் எடுத்து சென்றுள்ளனர்.
இந்த விடயத்தினை அறிந்த கல்முனை மாநகர சபையின் முன்னால் பிரதி மேயரும் தற்போதய உறுப்பினர் AA.பஸீர் அவர்கள் உடன் சம்பவ இடத்தினை அனுகி இடம்பெற்ற முறைகேடான சம்பவத்தினை கண்டித்து கல்முனை police யிலும் முறைப்பாடு ஒன்றினை அப்பிரதேச மக்களின் ஆனைக்கு இனங்க செய்துள்ளதாக தெரியவருகிறது. அதனை அடுத்து தளத்திற்கு கல்முனை police உடன் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தனர்
சாய்ந்தமருது 2ஆம் பிரிவில் கடற்கரை வீதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் உள்ள பெறுமதியான கம்பி நெட் வலைகளை இளைஞர் பாராளமன்ர உறுப்பினர் தில்ஷாத் இவ்வாறு முறைகேடாக எடுத்துச் செல்வதர்க்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் மற்றும் சாய்ந்தமருது 2 GS போன்றோர் உதவியதாகவும் அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவித்தனர்.
அது மாத்திரம் அன்றி இத்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அப்பிரதேசத்தை சேர்ந்த மக்கள் மற்றும் சிறுவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் இன்று மேற்கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறுவர்களின் கையில் எங்கள் உடமைகளை அழிக்காதே , நாங்கள் சிறுவர்கள் இல்லையா , எங்கள் சிறுவர் பூங்காவை அழிக்காதே போன்ற எதிர்ப்பு பதாதைகலும் காணப்பட்டன.
இச்சம்பவம் பற்றி அப்பிரதேசவாசி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் :
எங்கள் ஓய்வு நேரத்தினை களிப்பதர்கும் , எங்கள் பிள்ளைகள் விளையாடுவதர்கும் இந்த பூங்கா மிகவும் பெருமதியானதாக இருந்தது பிள்ளைகள் விளையாட பூங்காவில் உள்ள சில பொருட்கள் சேதமானது அதனை திருத்தித்தருமாறு ஹரீஸ் எம்பி அவர்களிடம் முறையிட செல்ல இருந்தோம் இவ்வாறு இருக்கையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இதர்க்கு உரியவர்கள் உடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..
எது எவ்வாராக இருந்தாலும் இவ்வாரான அராஜகங்களை மேற்கொள்வபர்கள் மீது கல்முனை மாநகர சபை சரியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாய்ந்தமருது 2 ஆம் பிரிவு மக்கள் கேட்டுக்கொண்டனர்
இல்லை என்றால் உரியவர்கள் கவனத்தில் கொள்ளும் வரை நாங்கள் ஆர்பாட்டம் செய்வோம் எனவும் ஆக்ரோசமான முறையில் கூரினார்கள்..













0 Comments