Subscribe Us

header ads

சுதந்திரத்தினத்துக்கு முன்னர் மஹிந்த குடும்பத்தில் மற்றுமொருவர் கைது!

மஹிந்த ராஜபக்ச குடும்பத்தின் மற்றும் ஒருவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று ஊடகம் ஒன்று எதிர்வு கூறியுள்ளது, அண்மையில் அமைச்சர் ராஜித சேனாரட்ன வெளியிட்ட தகவலை மையமாக கொண்டே இந்த எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஸ, யோசித்த ராஜபக்ஸவுக்கு கடுவலை நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவை வழங்கிய பின்னர் ராஜித சேனாரட்னவின் கருத்தை ஊடகங்களுக்கு சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு முன்னர் இரண்டு ராஜபக்ஸர்கள் கைதுசெய்யப்படுவர் என்று ராஜித குறிப்பிட்டிருந்ததாக மஹிந்த சுட்டிக்காட்டினார்.

எனினும் நீதிமன்றம் தமக்கு நியாயத்தைப்பெற்றுக்கொடுக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், கைதுகள் இடம்பெறலாம் தயாராகவேண்டும் என்று தமது சகோதரன் யோசிதவுக்கும் தாயார் சிராந்திக்கும் தாம் முன்னதாகவே கூறியிருந்தாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நேற்று கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சிராந்தி ராஜபக்ஸ நாளை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கது.

Post a Comment

0 Comments