Subscribe Us

பாலித ரங்கே பண்டாரவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

இராஜங்க அமைச்சர் அதிசொகுசு ஜீப் வண்டியொன்றை பெற்றுக்கொடுப்பதாகக் கூறி 54 இலட்சம் ரூபாய் பணமோசடி செய்தமை தொடர்பாக அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை அடுத்த மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி வீ.கருணாதிலக தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி நபர் ஒருவருக்கு அதிசொகசு ஜீப் வண்டியொன்றை பெற்றுத்தருவதாக கூறி 54 இலட்ச ரூபாய் பணத்தினைப் பெற்றுக் கொண்டு, அந்த ஜீப் வண்டியை வழங்காமை தொடர்பில் பாலித ரங்கே பண்டாரவிற்கு எதிராக சட்டமா அதிபர் ஒருவரால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கானது நீதிமன்றிற்கு விசாரணைக்காக எடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சருக்கு உடல்நிலை குறைபாடு காரணமாக குறித்த தினத்தில் அவரால் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க முடியவில்லையென அவரது சட்டத்தரணி வைத்திய அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்தமையை அடுத்து இந்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments