Subscribe Us

இலங்கைப் பாராளுமன்றத்தில் பெண் எம்.பி.க்களுக்கு பாலியல் ரீதியான சீண்டல்!

பாராளுமன்ற வளாகத்தில் பெண் எம்.பி.க்கள் பாலியல் ரீதியான தொல்லைகளுக்கு முகங்கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்குற்றச்சாட்டுக்களையடுத்து , பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒழுக்கம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என அரசின் உயர் மட்டத்திலிருந்து வலியுறுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆண் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலர் பெண் எம்.பிக்கள் அசௌகரியத்துக்குள்ளாகும் வகையில் நடந்துகொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறானதொரு தொல்லைக்கு முகங்கொடுத்துவரும் பெண் எம்.பி ஒருவர்,   வயதான பாராளுமன்ற உறுப்பினரொருவர் தனது கையை பிடிக்க அடிக்கடி முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

தன்னைக் கண்டவுடன் எப்போதும் அவர் கைகொடுக்க முயற்சிப்பதாக அப் பெண் எம்.பி. தெரிவித்துள்ளார்.

பெண்கள் எம்.பிக்களின் உடல் உறுப்புக்கள் குறித்த விரசமாக கேலி செய்தல் மற்றும் ஆபாச கதைகளை சொல்லல் என பல்வேறு பாலியல் ரீதியான சீண்டல்கள் இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகின்றது.

Post a Comment

0 Comments