Subscribe Us

header ads

மருதமுனை ஜம்'இய்யா 5வது தடவையாக ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம்

இலங்கை நாட்டின் 68வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மருதமுனை இஸ்லாமிய மாணவர் இயக்கம் (ஜம்'இய்யா) 5வது தடவையாக ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம் எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த நான்கு வருடங்களாக தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் இவ் இரத்ததான ஏற்பாட்டில் மருதமுனையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தமது பங்களிப்பினைச் செய்துள்ளனர். அதே போன்று இவ்வருடமும் ஆர்வமுள்ள அனைவரும் பங்குபற்றி இன்னொரு உயிரைக் காக்க எம்மால் இயன்றதொரு பங்குபற்றலினை வழங்க உறுதிகொள்வோம். (காமிஸ் கலீஸ்)
KAMEES KALEELS


Post a Comment

0 Comments