Subscribe Us

இலங்கையர்கள் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு - Times Of India


இந்தியாவின் பூனே நகரத்தில் 16 வயதுடைய பெண்ணொருவர் , இலங்கையிலுள்ள ஐ.எஸ் உறுப்பினர் ஒருவர் மூலம் அந்த இயக்கத்தில் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக டய்ம்ஸ் ஒப் இந்தியா பத்திரிக்கை இன்று அறிவித்திருந்தது.

அதே போல், இந்தியாவின் ஏனைய  மாநிலங்கள் மற்றும் பிலிபைன்ஸ் , சவுதி அரேபியா ,டுபாய் , இலங்கை போன்ற நாடுகளில் உள்ள ஐ.எஸ் ஆதரவாளர்களுடன் அவர் சமூக வலைத்தளம் மூலமாக தகவல்களை பரிமாற்றிக்கொண்டுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொலைக்காட்சி மற்றும் இணையத்தின் மூலம் ஐ.எஸ் இயக்கத்தைப்பற்றி தகவல்களை பெற்றுக்கொண்டுள்ள குறித்த பெண் சிரியாவிற்கு செல்வதற்காக தயார் நிலையில் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் , இந்திய தீவிரவாத ஒழிப்பு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய ஒயில் கார்பரேசனின் நிர்வாக அதிகாரியான மொஹமட் சிரஜுட்தீன் உடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் தகவல் வெளயாகியுள்ளது.

Post a Comment

0 Comments