தொழில் அமைச்சின்
மனிதவள திணைக்களம்,சர்வதேச தொழில் அமைப்பு மற்றும் அம்பாறை மாவட்ட செயலகம்
ஒன்றிணைந்து நடாத்தும் தொழிலை எதிர்பார்த்திருக்கும் அம்பாறை மாவட்ட பட்டதாரிகள்,டிப்ளோமாதாரிகள்
மற்றும் தொழிலை எதிர்பார்த்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பேட்டையானது
இன்று 18-12-2015ம் திகதி வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்ட செயலக
வளாகத்தில் காலை 9.00 மணியளவில்
ஆரம்பமாகி பிற்பகல் 3.00 மணியளவில்
நிறைவுக்கு வந்தது.இந் நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தில் தொழிலை
எதிர்பார்த்திருக்கும் பெருந் திரளான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.இத் தொழிற் பேட்டையானது
நாளையும் இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இத் தொழிற்
பேட்டைக்கு சமூகம் தருமாறு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.வை அமீர்
கையொப்பமிட்ட கடிதங்கள் அம்பாறை மாவட்ட
பட்டதாரிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தன.இப் பட்டதாரிகள் மிகப் பெரிய கற்பனைகளோடு இத்
தோழிற் பேட்டை நிகழ்வில் கலந்து கொண்டனர்.எனினும்,இதில் கலந்து கொண்ட தொழிலை
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகள் திருப்திகரமான பதிலை அளிக்காமை
குறிப்படத்தக்கது.
துறையூர் ஏ.கே
மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.





0 Comments