கிழக்கு மாகாணத்தின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலமிக்க ஒரு கோட்டையாக மூதூர் தேர்தல் தொகுதி காணப்படுகின்றது.இப்பிரதேசத்தினை அனைத்து வளங்களும் நிறைந்ததாக மாற்றியமைப்பது கிழக்கு மாகாண முதலமைச்சரான என்னையே சாரும்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அஹமட் மேற்படி தெரிவித்தார்.
கடந்த 2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது உயிரிழந்த இருபத்தைந்து குடும்பங்களுக்குத் தையல் இயந்திரம் மற்றும் வாழ்வாதார உதவிகள் ,பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று மாலையில் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜேஎம்.லாஹிரின் தலைமையில் நடைபெற்ற போது கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மூதூர் தேர்தல் தொகுதியில் கடந்த தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மரணித்ததை நாம் ஒரு போதும் இதனை மறந்து விட மாட்டோம்.
கட்சிக்காக உயிர்நீத்ததைப் பெருமையாகவே நான் பார்க்கின்றேன். மூதூர் பகுதியில் பின்தங்கிய அனைத்து பகுதிகளையும் புனரமைக்கப்படுவதோடு, நீண்ட பிரச்சினையாகக் காணப்படும் அக்கரைச்சேனை வீதி சீரமைக்கப்படும் என்றார்.
மூதூர் பிரதேசம் அரசியல் ரீதியாக எந்தவிதமான நன்மைகளும் இதுவரை அடையவில்லை. இதனை மாற்றியமைக்க வேண்டும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிரின் அணுசரனையுடன் அனைத்து வீதிகள், பாலங்களையும் சீர் செய்யப்படும்.
அத்தோடு மூதூர் கடலோர பகுதிகளுக்கும் கல் வேலி அமைக்கும் பணிகளையும் கூடிய விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றார். இந்நிகழ்வில் கிழக்குமாகாண சபை உறுப்பினர்கள், கட்சிப்பிரமுகர்கள் ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

0 Comments