Subscribe Us

உலகை நெகிழ வைத்த ஒரு சந்திப்பு: ஹைதரும் ரொனால்டோவும்! (PHOTOS)

பெய்ருட்  நகரில் அண்மையில் ஐ.எஸ். இயக்கத்தால் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் ஹைதர் அலி என்ற 4 வயது  சிறுவன், பெற்றோரை இழந்து அனாதையானான். கால்பந்து மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஹைதருக்கு போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோதான் ஹீரோ. ஹைதர் குறித்து சர்வதேச பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரியல்மாட்ரிட் அணி, ஹைதரை இரு நாட்களுக்கு முன்,  மாட்ரிட் நகருக்கு அழைத்து வந்தது. தற்போது ரியல்மாட்ரிட் அணியின் கவுரவ விருந்தினராக தங்கியுள்ள ஹைதர்,  நேற்று தனது ஹீரோவான கிறிஸ்டியானோ ரொனால்டோவை,  சான்டியாகோ பெர்னாபூ மைதானத்தில் சந்தித்தான்.
அப்போது ஹைதரும்,  ரியல்மாட்ரிட் அணிக்காக ரொனால்டோ அணிந்து விளையாடும் 7-ம் எண் ஜெர்சியை அணிந்திருந்தான். ஹைதரை அரவணைத்து ஆறுதல் கூறிய ரொனால்டோ, வருங்காலத்தில் சிறந்த கால்பந்து வீரராக வரவேண்டுமென சிறுவனை வாழ்த்தினார். 
தொடர்ந்து ரியல்மாட்ரிட் அணியின் தலைவர் ஃபுளோரென்டினா பெரஸ், ரியல்மாட்ரிட் அணி வென்ற கோப்பைகள் பற்றி ஹைதருக்கு விளக்கிக் கூறினார். ரொனால்டோ, பெரஸ் ஆகியோருடன் ஹைதர் இருப்பது போன்ற புகைப்படங்களை ரியல்மாட்ரிட் அணி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

கடந்த நவம்பர் 12-ம் தேதி, லெபனான் தலைநகர் பெய்ருட்டில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு சம்பவத்தில் 44 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதில் ஹைரின் பெற்றோரும் அடங்குவார்கள். 





Post a Comment

0 Comments