- සිංහල පුවත ද ඇත -
புத்தளம் மாவட்டத்தில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத் துறையின் அபிவிருத்தி, அறிவுசார் முன்னேற்றம், தொழில்சார் உறுதித்தன்மை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு செயல்படும் Puttalam IT Professionals Forum ஏற்பாட்டில் Local Resources for ICT Employment Businessஎன்ற தலைப்பில் Stakeholders Forum – ICT எனும் கருப் பொருளில் நிகழ்த்தப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி டிசம்பர் 16, 2015 பி.ப. 3.00 மணி முதல் புத்தளம் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கையின் அபிவிருத்தியை சாத்தியமாக்கக் கூடிய நான்கு துறைகளில் முக்கியமான ஒன்றாக தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் (ICT) காணப்படுகின்றது. இத் துறைசார் தொழில் சந்தைக்கு அறிவுத் திறன்மிக்க ஊழியர்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டிய காலக் கட்டாயத்தை Puttalam IT Professionals Forum உணர்ந்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில் இத் துறைசார்ந்தோரை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளும் பல்வேறு பணிகளில் ஒன்றாக இவ்வாறானதொரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை முதன்முறையாக நடத்தியது.
இந் நிகழ்ச்சிக்கு, சனத் மானகே (முகாமையாளர், கண்காணிப்பும் அறிவு மேலான்மை முகாமைத்துவமும் WUSC), அலோய் நிரோஷ் (விரிவுரையாளர், நிதி கணக்கியல் திணைக்களம், வியாபாரக் கற்கைப் பீடம், வவுனியா வளாகம், யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம்), சிவானந்தன் (வடமேல் மாகாண பிராந்தியத் தலைவர் WUSC) ஆகியோர் உட்பட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், துறைசார்ந்தோர் பலரும் கலந்துகொண்டனர்.
“ICT நிறுவனங்களின் நோக்கும்; தொழில் பயிற்சி அதிகாரச் சபை VTA ன் செயல்பாடுகளும்; இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களும் தனித்தனி திசைகளில் பயணிப்பதை அவதானிக்கின்றோம். எனவே, இத்துறையுடன் தொடர்புபடும் விற்பனையாளர், கல்வியியலாளர், பட்டதாரி மாணவர், சேவை வழங்குனர், தொழில் தருனர் ஆகியோர் மத்தியில் ஆளிடைத் தொடர்பினை Inter-connection ஏற்படுத்தும் பணியினை முன்னெடுத்துள்ளோம். ஏனெனில் இத் துறைசார்ந்தோரின் Inter-dependency(ஒருவரையொருவர் சார்ந்திருத்தல்) தவிர்க்க முடியாத யதார்த்த நிலையாகும்” என WUSC – World University Services Canada புத்தளம் மாவட்ட சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி ஸ்ரீ சுதர்ஷன் The Puttalam Times க்குத் தெரிவித்தார்.
இந் நிகழ்ச்சியின்போது, புத்தளத்தின் வளர்ந்து வரும் மென்பொருள் உற்பத்தியாளர் சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவன் எம்.என்.எம். அன்சாப், தான் உருவாக்கிய பாடசாலையை விட்டுவிலகும் சான்றிதழ் (School Leaving Certificate) மென்பொருளை இயக்கிக் காண்பித்தார். வருகை தந்த அனைவரும் இவருடைய முயற்சியைப் பாராட்டினர்.
இவ்வாறான கலந்துரையாடல்கள், கண்காட்சி, கள விஜயம், விரிவுரை போன்றன பிரதி காலாண்டுக்கு ஒரு முறை Puttalam ICT Professionals Forum ஊடாக நடத்துவதற்கு WUSCநிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்ரீ சுதர்ஷன் தெரிவித்தார்.
පුත්තලම දිස්ත්රික්කයේ තොරතුරු සන්නිවේදන තාක්ෂණ ක්ෂෙත්රයේ සංවර්ධනය, දැනුම දියුණුව, වෘත්තීය ස්ථිරතාවය මුල්කරගනිමින් ක්රියාත්මක වන Puttalam IT Professionals Forum සංවිධානය කළ Local Resources for ICT Employment Business යන මාතෘකාව යටතේ Stakeholders Forum – ICT නම් තේමාවෙන් යුතු සාකච්ඡාවක් දෙසැම්බර් 16, 2015 වැනි දින ප.ව. 3.00 සිට පුත්තලම දිස්ත්රික් ලේකම් කාර්යාල ශ්රවනාගාරයේ පැවැත්විණි.
ශ්රී ලංකාවේ සංවර්ධනය සාර්ථක කළ හැකි ක්ෂේත්ර හතර අතුරින් එකක් වන්නේ තොරතුරු සන්නිවේදන තාක්ෂණය (ICT) යි. මෙම ක්ෂේත්රයේ රැකියා වෙළඳපොළට දැනුම හැකියාවෙන් සම්පන්න සේවකයින් සැපයීම වේගවත් කළ යුතු කාලීන අවශ්යතාවයPuttalam IT Professionals Forum විසින් අවබෝධ කරගෙන ඇත. පුත්තලම දිස්ත්රික්කයේ මෙම ක්ෂේත්රයේ නියුතු පුද්ගලයින් උනන්දු කරවීමේ ක්රියාකාරකම් අතුරින් එකක් ලෙස ප්රථම වතාවට මෙවන් සාකච්ඡාවක් පැවැත්විණි.
මෙම වැඩසටහනට සනත් මානගේ (කළමණාකරු, අධීක්ෂණය හා දැනුම කළමණාකරනයWUSC), ඇලෝයි නිරෝෂ් (කථිකාචාර්ය, මුදල් හා ගිණුම් දෙපාර්තමේන්තුව, ව්යාපාර අධ්යයන පීඨය, වවුනියාව කැම්පස්, යාපනය විශ්වවිද්යාලය) සිවානන්දන් (ප්රාදේශීය කණ්ඩායම් නායක WUSC) යනාදීන් ඇතුළු රාජ්ය නොවන සංවිධානවල නියෝජිතයින් හා ක්ෂේත්රයේ නියුතු පුද්ගලයින් සහභාගි වූහ.
“ICT ආයතනවල දැක්මත් වෘත්තීය පුහුණු අධිකාරියේ ක්රියාකාරකමත් තරුණන්ගේ අපේක්ෂාවනුත් එකිනෙක වෙනස් දිශාවල ගමන් කරන අන්දම දකින්නෙමු. එහෙයින් මෙම ක්ෂේත්රය හා සම්බන්ධ ව්යාපාරිකයින්, අධ්යාපනඥයින්, උපාධි අපේක්ෂකයින්, සේවා සපයන්නන්, රැකියා සපයන්නන් අතර අන්තර් පුද්ගල සම්බන්ධතාවය ඇති කිරීමේ කාර්යභාරය ආරම්භ කර ඇත්තෙමු. මන්ද, මෙම ක්ෂේත්රයේ පුද්ගලයින් එකිනෙකා මත යැපිය යුතු වීම වැලැක්විය නොහැකි යතාර්ථයකි” යැයි WUSC ආයතනයේ පුත්තලම දිස්ත්රික් ජ්යෙෂ්ඨ වැඩසටහන් නිලධාරි ශ්රී සුදර්ශන් මහතා The Puttalam Times මාධ්යයට කරුණු පැහැදිලි කලේය.
පුත්තලමේ නවක මෘදුකාංග නිෂ්පාදකයෙකු වන සාහිරා ජාතික පාසලේ ශිෂ්ය එම්.එන්.එම්. අන්සාප් තමා විසින් නිෂ්පාදනය කළ පාසල හැරයාමේ සහතිකයක් නිර්මාණය කිරීමේ මෘදුකාංගය ක්රියාත්මක කර පෙන්වීය. පැමිණ සිටි සියළු දෙනා මෙම තරුණයාගේ උත්සාහය ප්රසංශා කළහ.
මෙවන් සාකච්ඡා, ප්රදර්ශන, ක්ෂේත්ර අධ්යයන චාරිකා, දේශන යනාදිය සෑම කාර්තුවකට එක් වරක් Puttalam ICT Professionals Forum හරහා පැවැත්වීමට WUSC ආයතනය සැලැසුම් කර ඇති බවද ශ්රී සුදර්ශන් මහතා පැවැසීය.
-THE PUTTALAM TIMES-











0 Comments