Subscribe Us

header ads

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் மு.காவில் இணைவு

அபு அலா –

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் எம்.சமீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை காரியாலயத்தில் நேற்று காலை (28) அமைச்சர் எ.எல்.முஹம்மட் நஸீருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் எம்.சமீம் உள்ளிட்ட குழுவினருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே அவர் இணைந்துகொண்டார்.

கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தீவிர போராளியாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மாகாண சபை உறுப்பினராக இருந்த காலத்தில் இறக்காமம் பிரதேசத்துக்கான செயற்பாட்டு அதிகாரியாகவும் செயற்பட்டு வந்த இவர், சில சொற்ப இலாபங்களுக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments