மனிதனின் உடல் சீராக இல்லாமல் வலது-இடது பகுதிகள் ஓரளவு வித்தியாசத்துடன் காணப்படும். அதாவது உடலின் வலது பாகங்கள் இடது பகுதியை விட சிறிது கனமாக இருக்கும். இதேபோல் இரண்டு பகுதிகளாக இருக்கும் மூளையின் செயல்பாடுகளிலும் சிறிது வித்தியாசம் இருக்கும்.
பொதுவாக மனிதர்களுக்கு மூளையின் இடது பகுதி, வலது பகுதி மூளையைக் காட்டிலும் சற்று ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கும். அப்போது, மூளையில் இருந்து வரும் கட்டளைகள் உடலின் வலது பாகத்திற்குச் செல்கின்றன.
எனவே, நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வலது கைப் பழக்கமே இருக்கிறது. ஆனால், இடதுகை பழக்கமுள்ளவர்களுக்கு, வலது மூளை ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கிறது. மூளையில் இருந்து வரும் கட்டளைகள் உடலின் இடது பாகங்களுக்குச் செல்வதால், இதுபோன்ற உடல் அமைப்பைக் கொண்டவர்கள் இடது கைப்பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
உலக அளவில் 4 சதவீத மக்களுக்கே மட்டுமே இடது கைப்பழக்கம் இருக்கிறது. அதனால்தான் வீட்டுக் கதவுகளின் கைபிடிகளில் இருந்து அனைத்து வகையான பொருட்களும் வலது கை பழக்கத்திற்கு ஏற்றபடியே வடிவமைக்கப்பட்டுள்ளன.


0 Comments