Subscribe Us

header ads

ஹிருனிக்காவினால் ஏன் துமிந்தவை கடத்த முடியாது?

தமது தந்தையின் கொலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை ஏன் கடத்திச் செல்ல முடியாது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரபல பாடகர் மதுமாதவ அரவிந்த இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

குடும்பப் பிரச்சினை ஒன்றுக்காக தாம் ஒரு சட்டத்தரணி என்ற அடிப்படையில் ஹிருனிக்கா ஒருவரை கடத்திச் சென்று விசாரணை செய்திருக்கிறார்.

இந்தநிலையில் தமது தந்தையாரின் கொலை தொடர்பில் தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வரும் துமிந்த சில்வாவை ஏன் அவரால் கடத்திச் சென்று தமது சொந்த நீதிமன்றத்தில் விசாரணை செய்ய முடியாது என்று அரவிந்த கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே சட்டத்துக்கு புறம்பாக செயற்பட்டுள்ள ஹிருனிக்கா கைதுசெய்யப்பவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் பாடகர் அரவிந்த இந்தக்கோரிக்கையை விடுத்தார்.

Post a Comment

0 Comments