Subscribe Us

பின்லேடனுடன் பறக்கிறேன்: சீக்கியரை இழிவுபடுத்தி சர்ச்சையில் சிக்கிய அமெரிக்கர் (வீடியோ இணைப்பு)

விமானத்தில் தன்னுடன் பயணித்த சீக்கியரை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்டு அமெரிக்கர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பாரில் தாக்குதலுக்கு பிறகு உலகளவில் இஸ்லாமியர்கள் மீதான கலாச்சார தாக்குதல்கள் அதிகமாகிவிட்டன.

மேலும் இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற தவறான தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இத்தகைய தாக்குதல்களில் சீக்கியர்களும் அண்மை காலமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் வசிக்கும் தர்ஷன் சிங் என்ற சீக்கியர் ஒருவர் நியூயார்க் நகரில் இருந்து கலிஃபோர் னியாக்கு கடந்த மாதம் ஜெட் ப்ளூ விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

பயணத்தின் இடையே அவர் தூங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அவருடன் பயணித்த அமெரிக்கர் ஒருவர் அவரை படம் எடுத்துள்ளார்.

மேலும் இந்த வீடியோவை ”நீங்கள் பாதுகாப்பாக உணர்வீர்களா?" என்ற தலைப்பில்  சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

மேலும் அதில் "பின்லேடனுடன் பறக்கிறேன்" என்றும் குறிப்பிட்டிருந்தார். கடந்த டிசம்பர் 9 ம் திகதி பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ இதுவரை 1 லட்சம் தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.

பலரும் இந்த வீடியோவுக்கு எதிரான தங்களது கருத்துகளை பதிவுசெய்துள்ளனர். மேலும் இந்த வீடியோவுக்கு எதிரான தங்களது கண்டனத்தையும் சீக்கிய குழுக்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments