அக்கரைப்பற்று - கண்ணகிபுரம் பகுதியில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனே பரிதாபமாக நேற்று உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் தனது வீட்டு முற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் விளையாடி கொண்டிருந்த போது ஊஞ்சல் கயிறு சிறுமியின் கழுத்தில் இறுகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


0 Comments