இலங்கையில் இஸ்லாமிய மயமாக்கல் நல்லிணக்கம் என்ற திரையின் ஊடாக மறைக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்புபட்டுள்ள இந்த இஸ்லாமிய மயமாக்கலை நல்லிணக்க திரையிலிருந்து நீக்கி, அதனை ஒரு அடிப்படை வாதமாகவும், பயங்கரவாதமாகவும் அரசு இனங்காண வேண்டுமென பொது பல சேனா அமைப்பு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்புகளை பேணி வருகின்றார்களா என்று அரசு ஆராய வேண்டும்.
அதற்காக இலங்கையில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரசாக்கள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.


0 Comments