Subscribe Us

header ads

துருக்கி அதிபர் ரஜப் எர்துகானை மட்டும் இன்றி உலகையே கலங்க வைத்த சிரிய சிறுமியின் மரண சாசனம்


இறைவனின் பேரருள் சூழ்ந்த நிலையிலேயே நமது வாழ்க்கை சக்கரம் சூழண்டு கொண்டிருக்கிறது என்பது தான் உண்மையாகும் 

போர் பூமியாக மாறியுள்ள சிரியாவை சார்ந்த ஒரு சிறுமியின் மரண சாசனம் நம்மை கதற வைப்பதாகவும் பதற வைப்பதாகவும்
அமைந்துள்ளது 

அமைதி மண்ணான சிரியாவையும் அங்குள்ள சன்னி முஸ்லிம்களையும் சீரழித்து சின்னா பின்ன மாக்கிய பெருமை ஈரானுக்கும் அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்குமே சொந்தம்

சிரிய முஸ்லிம்களின் கண்ணீர் துளிகளுக்கு இந்த அயோக்கியர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்

சிரியாவின் சிறுமி தனது கையால் எழுதிய மரண சாசன குறிப்பு உலகையே நிலைகுலைய வைத்திருக்கிறது 

அந்த குறிப்பை படித்த துருக்கி அதிபர் ரஜப் எர்துகான் ஒரு நிகழ்சியில் கதறி அழுதார் 

அப்படி அந்த சிறுமி எழுதியது தான் மனித உயிர்களை கைபற்றும் மரணத்தின் வானவரே எனது உயிரை சற்று விரைந்து கை பற்றுவீராக இங்கு பசியால் துடிப்பதை விட சுவனத்தில் எனது இறைவன் வழங்கும் பாக்கியங்களை சுவைக்கிறேன் 

என்னருமை தாயே எனது மரணத்திற்கு பிறகு எனது வசந்த காலங்களை மட்டும் நீங்கள் எண்ணி மகிழுங்கள் 

எனது சகோதரர்களே நான் பசியால் இறந்து விட்டேன் என்ற செய்தியை எனது நண்பர்களுக்கு சொல்லி விடுங்கள் 

இந்த செய்தியை தனக்கு கவுரவ டாக்கடர் பட்டம் வழங்க பட்ட விழாவில் படித்த துருக்கி அதிபர் கதறி அழுதார் 

அவர் மட்டும் அழவில்லை இந்த செய்தியை படிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் அழுகிறான் 

என்று முடியும் இந்த துயரம் என்று விடியும் சிரிய மக்களின் வாழ்க்கை 

பிரார்த்திப்போம் அந்த மக்களின் விடியலுக்காக கையேந்துவோம் இறைவனிடம் உருகிய மனதோடு 

எங்கள் இறைவா சிரிய மக்களின் வாழ்வில் விரைவாக விடியலை தோற்று விப்பாயாக அந்த மக்களின் குற்றங்குறைகளை மன்னித்து அவர்களின் வாழ்வில் வசந்த தென்றலை மீண்டும் வீச செய்வாயாக!!

Post a Comment

0 Comments