Subscribe Us

காலையில் சோகம் வரகாபொல பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய விபத்தில் ஐந்து முஸ்லிம்கள் ஸ்த்தலத்திலேயே வபாத் (படங்கள்)

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வரகாபொல பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேன் ஒன்றும் பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சம்மாந்துறை பகுதியில் இருந்து கொழும்பில் பாஸ்போர்ட் உட்பட சில அலுவல்களை செய்ய வந்த முஸ்லிம்களே இதில் வபாத்தாகி உள்ளதாக அங்கிருக்கும் எமது நிருபர் தெரிவித்தார்.

மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறு குழந்தை ( இரண்டரை வயது, 29, 26 வயது பெண்கள் உட்பட சாரதி ஆகிய ஐவர் இந்த விபத்தில் பலியாகியுள்ளதாகவும் பலர் காயமடைந்து உள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் வரகாபொல, கேகல்ல, கொழும்பு, நிட்டம்புவ வைத்திய சாலைகலீல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட சம்பவத்தின் படங்கள் மிகவும் மன உளைச்சலையும், வேதனையையும் தரக்கூடிய வகையில் உள்ளதால் அவற்றை இங்கு பதிவேற்ற இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

-AlMasoora-






Post a Comment

0 Comments