நிருபர்: அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ஹுதா அவர்களே ! எமது மக்கள் மேன்மை அறிமுக நிகழ்விற்காக உங்களை பற்றி சுருக்கமாக சொல்லுங்களேன்..
ஹுதா : வா அலைக்குமுஸ்ஸலாம். முதலில் இந்த சந்தர்பத்தை எனக்கு தந்தமைக்கு நன்றி,நான் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்,முஸ்லிம் மக்கள் பிணைந்து வாழும் காரைதிவு பிரதேச செயலகத்தின் அதிகாரத்தின் கிழே உள்ள மாளிகைக்காடு எனும் ஊரில் 1990.04.07ம்திகதி நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சீனிமுஹம்மது உமர்லெப்பை ,முஸ்தபா சித்தி கவுலா ஆகியோருக்கு முதல் மகனாக பிறந்தேன். எனது ஆரம்ப கல்வியை மாளிகைக்காடு அல் -ஹுசைன் வித்தியாலயத்திலும்,உயர் கல்வியை சாஹிரா தேசிய கல்லூரியிலும் கற்றேன்.எனது மேலதிக உயர் கல்வியை அகில இந்திய முகாமைத்துவ கல்வி நிலையதிலும் ,கொழும்பு சிம்ஸ் தனியார் பல்கலைகழகத்திலும் கற்றேன்.தற்போது இந்தியாவில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைகழகத்தில் எனது முதுமாணி (MBA ) பட்டப்படிப்படிப்பை மேற்கொண்டு வருகிறேன்.
நிருபர்: உங்கள் எழுத்துப்பணி பற்றி கூறுங்களேன்......
ஹுதா : இலங்கையின் பல தேசிய பத்திரிக்கைகளுக்கும்,சர்வதேச ஊடகங்களுக்கும் எனது சொந்த பெயர்களிலும் எனது புனைப்பெயர்களுடனும் பல செய்திகளை எழுதிவருகிறேன்.அதே போன்று சமூக வலைத்தளங்களுக்கும் எனது செய்திகள் சென்றடைகிறது.மக்கள் நம்பிக்கையை வென்ற தினப்பத்திரிகை ஒன்றின் ஆசிரியராகவும் கடமையாற்றுகிறேன்.நான் என்னுடைய பாடசாலை காலங்களில் இருந்து கவிதைகள் ,கட்டுறைகள் என எழுதி வருகிறேன்.எனது கவிதைகளை பாராட்டி 2 தடவைகள் NYSC இன் தேசிய விருதுகள் கிடைக்கபெற்றன. அதேபோன்று பல மாகாண ,மாவட்ட போட்டிகளிலும் எனது எண்ணங்களுக்கும் எழுத்துக்களுக்கும்,பல விருதுகள் கிடைக்க பெற்றது.
நிருபர்: நீங்கள் பெற்ற உயரிய கௌரவமாக எதனை எண்ணுகிறீர்கள்?
ஹுதா: 2 தடவைகள் தேசிய அளவில் முதலிடம் கிடைத்தும் நான் உயரிய கௌரவமாக எண்ணுவது எனது பாடசாலை சமுகம் தந்த கலைமகன் விருதே. அண்மையில் கட்டார் தமிழ் அமைப்பு ஒன்றினால் எனக்கு சிறந்த சமூக நோக்கு கவிதைக்கான விருது கிடைக்க பெற்றது அளவில்லா மகிழ்ச்சியே..
நிருபர் : எழுத்து துறை தாண்டி நீங்கள் ஒரு அறிவிப்பாளரும்,பேச்சாளரும் கூட அந்த அனுபவத்தை சொல்லுங்கள்..
ஹுதா: எனது முதலாவது அறிவிப்பு 1997.10.06 ஒரு ஆசிரியர் தினத்தில் ஆரம்பமாகி எனது ஆசிரியர்களாலும் ,மேலும் பலரின் ஊக்கத்தாலும் சிறப்பாக உருப்பெற்று பல அறிவிப்பு துறை சார் விருதுகளையும் பெற்று கொடுத்தது. NYSC தேசிய விருதினை பெற்ற எனக்கு பலவழிகளிலும் உதவிய எனது குடும்பத்திற்கு என்றும் நான் நன்றிகடன் பட்டவனே. அதேபோன்று எனது நண்பர்களான சப்னி,தானிஸ்,மோகன்,தியாகு ஆகியோருக்கும் பங்கு உண்டு எனலாம். ஒரு அரசியல் மேடையில் குறித்த ஒரு பிரமுகர் வருவதற்கு தாமதம் ஆகியதால் அந்த நேரத்தை முகாமைத்துவம் செய்ய யாருமில்லாததால் அந்த நேரத்தில் நான் ஒரு கட்சியின் தலைவர் முன்னிலையில் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் முதலாவது அரசியல் பேச்சை அங்கு பேசினேன்.நான் அங்கு அன்றைய சூழ்நிலைக்கு சரியான விடயத்தை தெளிவாக பேசியதாகவும் தைரியமான சிறந்த பேச்சாளருக்கான தகுதி இருப்பதாகவும் அந்த மேடையில் இருந்த பலரும் பாராட்டிய அந்த நேரம் எனது வாழ்க்கைக்கு கிடைத்த பொன்னான நேரம் எனலாம்.அதனை தொடர்ந்து அந்த கட்சி போட்டியிட்ட தேர்தலில் சகல மேடைகளிலும் முழங்க ஆரம்பித்தேன்.
ஒரு சில தனியார் ஊடகத்தில் அறிவிப்பாளர் வேலைக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்தும் எனது வெளிநாட்டு தொழில் வாய்ப்பினால் அது எட்டாக்கனியாகி விட்டது வேதனையான ஒன்றே.
நிருபர்: உங்கள் வளர்ச்சிக்கு காரணம் யார் ? உங்கள் வளர்ச்சியிலும் ஒரு பெண் உள்ளாரா?
ஹுதா: என் வளர்ச்சிக்கு முதல் காரணம் எனது சகோதரர் . நான் சறுக்கி விழும் இடமெல்லாம் கரம் கொடுக்கும் நண்பராய் இருக்கிறார்.எனது சகோதரர் தான் இதெல்லாம் சாத்தியமானது எனலாம் .எனது வழிகாட்டி, மை ரோல் மோடல் அவர்தான்.எனது முதல் கவிதை நூலான பனை ஓலைகள் கவிதை வெளியிட்டு விழா சிலரின் சதியால் படுதோல்வியை சந்தித்தது.அப்போதும் எனக்கு ஆறுதலாக இருந்தவர்.அதனால் தான் இன்று பனையோலைகள் ,இசை பாடும் மூங்க்கில்காடு,கருவறை சொந்தங்கள்,மிக விரைவில் கப்பல் பயணம் ஆகிய கவிதை நூல்களை இந்த இலக்கிய உலகுக்கு தர முடிந்தது. அதேபோல என்வளர்ச்சிக்கு பின்னல் ஒன்றில்லை 4 பெண்கள் இருக்கிறார்கள்.எனது தாயும் சகோதரிகளும் தான் அவர்கள்...எனது முதலாவது கவிதை நூல் தோல்வியை சந்தித்த போது ஊக்கம் அளித்தவர்கள் இவர்கள் தான் .எனது தந்தையின் அர்ப்பணம் சொல்லில் வடிக்க முடியாத ஒன்றே.
நிருபர்: நீங்கள் சமூக சேவையிலும் அதீத ஈடுபாடு கொண்டவர் அதனை பற்றி சற்று கூறுங்கல்.
ஹுதா: நான் ஏற்கனவே சொன்னது போல எனது குடும்பத்தினர் அதிக சமுக நலன் கொண்டவர்கள். முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு முதல் ஆளாக குரல் கொடுக்கும் அன்வர் முஸ்தபா.இவர்களை பார்த்து பழகியதாகவே இந்த சமுக சேவையை என்னுகிறேன். சகல இன, பிரதேச,மக்களையும் உள்ளடக்கியதாக உள்ள அல்-மீசான் பௌண்டசன் அமைப்பின் தலைவராக என்னை நியமித்திருப்பது எனக்கு சந்தோசமே.இது தவிர சிறு வயதில் ஜும்மா பள்ளிவாசல் ஒன்றின் நிருவாக சபை உறுப்பினராக,கிராம அபிவிருத்தி சங்க உப செயலாளர்,சனசமுக நிலைய பிரதி தலைவர்,பிரதேச மட்ட முதலுதவி குழு தலைவர்,இளையோர் கழகங்களின் தலைவராக பொறுப்பு வகித்த அனுபவம் மிக பெரிய அனுபவமே.தமிழ் சகோதரர்கள் அதிகமாக வசிக்கும் எனது பிரதேசத்தின் பிரதேச சம்மேளன தலைவராக தொடரச்சியாக 3 வருடங்களும்,அம்பாறை மாவட்ட சம்மேளன தலைவராக,அமைப்பாளராக நியமிக்க பட்டது எனது தலைமைத்துவ ஆளுமைக்கு அவர்கள் தந்த உரிய கௌரவமாக கருதுகிறேன்.இன,பிரதேச வாதங்கள் அற்ற எனது சேவையை பாராட்டி எனக்கு அம்பாறை மாவட்ட செயலகம் விருதும் தந்துள்ளதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் மாற்றுதிரனாளிகளுக்கான வேலைத்திட்டத்தில் சம்பளமற்ற ஊழியராக கடமையாற்ற கிடைத்தது எனது பாக்கியமாகவே கருதுகிறேன்.
நிருபர்: நீங்கள் அரசியல் கட்சியிலும் முக்கிய பதவி வகிக்கிறீர்கள் அது சம்பந்தமாக சொல்லுங்கள்?...
ஹுதா: தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் அக்கட்சியின் ஊடக இணைப்பாளராகவும் எங்களது கட்சி என்னை நியமித்துள்ளது.....
நிருபர்: எதிர்வரும் உள்ளுராட்சி சபையில் போட்டியிடுவீர்களா? எந்த சபையில் போட்டியிடுவீர்கள் ?
ஹுதா : நிச்சயமாக தேர்தலில் களமிறங்குவேன், எங்களது கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் 1 ஒப்பந்தம் செய்ய உள்ளோம் அது வெற்றியளித்தால் அக்கட்சியுடன் இணைந்து களமிறங்குவோம் அல்லது தனித்தும் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது. அதே போன்று பெரிய கட்சிகளுடனும் எங்களது கட்சி பேச்சுவார்த்தை செய்ய கொண்டிருக்கிறோம். கடைசி வரை எந்த கட்சி என்பதை தற்போது என்னால் கூற முடியாது. இன்சா அல்லாஹ் காரைதீவு பிரதேச சபையில் களமிறங்க உத்தேசித்துள்ளேன்.
நிருபர் : வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறதா ?
ஹுதா: இன்சா அல்லாஹ்,எனது மண்ணில் சமுக சேவகர்களை பட்டியல் படுத்தினால் அதன் முன்னிலை வரிசையில் எனது பெயரும் இருக்கும் என்பது மக்கள் அறிந்த உண்மை. தேர்தலை மையமாக வைத்து பல அமைப்புக்கள் முளைத்து வருகிறது. அவற்றையெல்லாம் மக்கள் ஏற்பார்களா என்பது காலம் பதில் சொல்லும்.இளம் சமூகத்தின் கையில் இந்த முறை மக்கள் அதிகாரத்தை கொடுப்பார்கள் என்பது எனது நம்பிக்கை.அத்துடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என்னை நன்றாக அறிந்தவர்கள்தான் உள்ளனர். அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் இன்சா அல்லாஹ் எனது மண்ணுக்கு விடிவு என்மூலமாக கிடைக்கும்.
நிருபர்: நீங்கள் வெற்றி பெற்றால் உங்கள் எதிர்கால திட்டம் என்ன?
ஹுதா : . நவீன தொழினுட்பத்தை கொண்ட பிரதேசமாக எனது பிரதேசத்தை மாற்றியமைப்பேன். அத்துடன் கல்வியில் பாரிய புரட்சியை கொண்டுவருவேன். கழிவகற்றல் பிரச்சினையை நாங்கள் எங்கள் கட்சியால் செயற்படுத்த உள்ள பசளை தொழிற்சாலை மூலம் இல்லாது ஒழிப்பேன்.இப்படி இன்னும் பல முக்கிய அபிவிருத்திகளை திட்டம் தீட்டியுள்ளேன்.....
நன்றி ஹுதா
செவ்வி கண்டவர் : ஜெகதீஸ்வரன் & லாபீர் இஸ்மாயில்


0 Comments