Subscribe Us

தாஜூதீன் மரணம்! தொலைபேசி விபரங்கள் டயலொக் நிறுவனத்தினால் சட்டமா திணைக்களத்திடம் கையளிப்பு!

ரக்பி வீரர் வஸிம் தாஜூதீன் மரணம் தொடர்பான தொலைபேசி உரையாடல் விபரங்களை டயலொக் எக்ஸியாடா நிறுவனம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வழங்கியுள்ளது.

முன்னதாக இந்த தகவல்களை வழங்குவதற்கு டயலொக் நிறுவனம் மறுப்பு தெரிவித்து வந்தது.

இதனையடுத்து அந்த நிறுவனம் மீது சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

எனினும் இறுதியாக கடந்த வாரத்தில் இந்த விபரங்களை டயலொக் நிறுவனம், சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளது.

இதனையடுத்து டயலொக் நிறுவனத்துக்கு தமது நன்றியை தெரிவித்துள்ள சட்டமா அதிபர் திணைக்களம், இந்த தரவுகளை வைத்துக் கொண்டு தாஜூதீனின் மரணம் தொடர்பான விசாரணையை விரைவுப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments