கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சுயாதீனத் தொலைக்காட்சி ஊடாக மைத்திரியின் விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என்ற ஆணை பிறப்பித்த கடிதம் சிக்கியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களுக்காக சுயாதீனத் தொலைக்காட்சி சேவையை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தது.
பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நடைபெற்ற குறித்த வழக்கில் சாட்சியமளித்த சுயாதீனத் தொலைக்காட்சியின் கணக்காய்வாளர் மேற்குறித்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று கடிதம் ஒன்றின் வாயிலாக ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும், குறித்த கடிதம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments