Subscribe Us

header ads

சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்ட அஸ்மில் பிணையில் விடுதலை

2015.10.07ம் திகதி புதன் கிழமை ஆறு வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் முஜாஹிதீன் மஸ்ஜித் வளாகத்தில் வைத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்ட எம்.பீ.எம். அஸ்மில் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக புத்தளம் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் குற்றத்தினை நிரூபிக்கும் வகையில் வலிதான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறாததுடன், சந்தேக நபருக்கெதிராக குற்றப்பத்திரிக்கையினையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திராத நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
சந்தேக நபர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த வாதத்தை கருத்திற்கொண்ட பதில் நீதவான் சுனில் ஜயவர்தன சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
கடந்த இரண்டு மாதங்களாக குறித்த சம்பவம் புத்தளம் பிரதேசத்தில் சூடான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்ததுடன், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இது தொடர்பான கருத்துக்கள் ஊடகங்களிலும் சமூக வலைத் தளங்களிலும் பலவாறு அலசப்பட்டதுடன் புத்தளத்திலும் நாடளாவியரீதியிலும் பேசுபொருளாக மாறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
-Puttalam Online-

Post a Comment

0 Comments