பலவந்தமாக இரத்தம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையொன்று தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞனொருவனே இச்சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
கொழும்பு , மலே வீதி பிரதேசத்தில் குறித்த இளைஞனை வாகனத்தில் ஏற்றிய கும்பல் அவரை நீர்கொழும்புக்கு கொண்டு சென்று இர த்தத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேனில் ஏறியவுடன் தனக்கு பானமொன்றை குடிக்கக் கொடுத்ததாகவும் , அதன் பின்னர் தான் மயக்கமடைந்ததாகவும் இளைஞர் தெரிவித்துள்ளார்.
பின்னர் நீர்கொழும்பிலிருந்து பஸ்ஸில் கொழும்பு வந்துள்ள அவர் தனக்கு நேர்ந்த அவலம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.


0 Comments