இந்து நாடான நேபாளில் ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் வரலாறு காண அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து லட்சக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்து துயரத்தில் ஆழ்ந்தனர்.
ஏழை நாடான நேபாள் துயரத்தில் தவித்த போது முதலாவதாக உதவிக்கரம் நீட்டிய நாடு பாகிஸ்தான்.
பாகிஸ்தான் ராணுவம் நேபாளுக்கு உடனடியாக விரைந்து முதலுதவியாக மீட்பு பணியில் ஈடுபட்டது. அதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் ஆண் மற்றும் பெண் மருத்துவக்குழு விரைந்து கேம்ப் அமைத்து அந்த மக்களுக்கு மருத்துவ உதவி செய்தது. அதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் முஸ்லிம் இயக்கங்கள் விரைந்து உணவு போன்ற உதவிகளை வழங்கினர்.
அதன்பின்னர் பாகிஸ்தான் அரசு நேபாளில் ஏற்பட்ட இழப்பீட்டில் 25 சதவீத பொருளாதார செலவுகளை பாகிஸ்தான் அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.
பாகிஸ்தான் இந்த விசயத்தை கையிலெடுத்த காரணத்தினால் கத்தார் நாடு 5 கோடி அமெரிக்க டாலர்களை நேபாளுக்கு வழங்கியது.
சவூதி அரேபிய அரசு நேபாளுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் விமானம் மூலம் நேபாளுக்கு அனுப்பியது.
சிங்கப்பூரிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் வெள்ளிக்கிழமை தொழுகையில் வசூல் செய்யப்பட்டு அந்த பணம் நேபாளுக்கு அனுப்பப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் இயக்கங்கள் வசூல் செய்து நேபாளுக்கு நிதி உதவியும், நிவாரண உதவியும் வழங்கியது.
இந்து நாடான நேபாளுக்கு முஸ்லிம்கள் செய்த உதவிகளை எந்த ஊடகமும் வெளிப்படுத்தவில்லை,
முஸ்லிம்கள் அந்த பிரச்சினையை கையிலெடுத்ததால் அது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
பாகிஸ்தான் முஸ்லிம் பெண் டாக்டர்கள் நேபாள் பெண்களுக்கு நேபாளில் பிரசவம் பார்த்தனர். அந்த நன்றி விசுவாசத்தின் காரணத்தினால் ஒரு குழந்தைக்கு பாகிஸ்தான் என்றும் இன்னொரு குழந்தைக்கு லாகூர் என்றும் பெயர் சூட்டினர்.
இந்து நாட்டிற்கு முஸ்லிம் நாடுகள் செய்த உதவிகளை உலக நாடுகள் பாராட்டிய போது பொறாமையில் எரிந்து கொண்டிருந்த மாலைமலர் போன்ற தமிழக ஊடகங்கள் பாகிஸ்தான் அனுப்பிய உணவில் மாட்டிறைச்சி வழங்கப்பட்டுள்ளது என்று பிரச்சாரம் செய்தனர்.
இந்திய, தமிழக ஊடகங்களின் பிரச்சாரத்திற்கு உடனடியாக பதிலளித்த நேபாள் அரசு பாகிஸ்தானிலிருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 க்கும் மேற்பட்ட உணவுகள் வந்தன. ஒவ்வொரு உணவின் மீதும் இது இந்த பொருள் என்று ஆங்கிலத்திலும், உருதுவிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த 25 பொருளில் ஒரு பொருள் தான் பீப்,
மேலேயே வாசகத்தை படித்து விரும்புகிறவர்கள் பிரித்து சாப்பிடலாம், விரும்பாதவர்கள் தூக்கி வீசலாம்.
ஆனால் இதில் இந்திய ஊடகங்கள் அரசியல் செய்கிறது, இந்திய பாஜக அரசு எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை, ஆனால் முஸ்லிம் நாடுகள் செய்யும் மனிதநேய பணிகளை கெடுப்பதற்கு பொய் பிரச்சாரம் செய்கின்றன என்று நேபாள் அரசு குற்றம் சாட்டியது.
நேபாளில் எப்படி பிறந்த குழந்தைகளுக்கு பாகிஸ்தான், லாகூர் என்று பெயர் சூட்டி நன்றி தெரிவித்தனரோ அதேப்போல் சென்னையில் கர்ப்பிணி பெண்ணான சித்ராவை முஸ்லிம்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததற்கு நன்றி தெரிவித்து பிறந்த குழந்தைக்கு யூனுஸ் என்று பெயர் சூட்டினர் மோகன் சித்ரா தம்பதிகள்,
நேபாள் நிலநடுக்கம் எப்படி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்ததோ அதேப்போல் தமிழக வெள்ளபெருக்கை இஸ்லாமிய சமுதாயம் கையிலெடுத்ததால் தமிழகம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து அரபு நாடுகளில் பணிப்புரியும் இஸ்லாமியர்கள் கோடான கோடி ரூபாய்களை நிவாரண உதவிகளாக வழங்கியுள்ளனர்.
இன்ஷா அல்லாஹ் விரைவில் உங்களுக்கு அந்த உதவிகள் முழுமையாக வந்து சேரும்....
நேபாளாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி இஸ்லாமியர்களின் தியாகம் எல்லையே இல்லாதது என்பதை கண்கூடாக பார்த்திருப்பீர்கள்.
நேபாளிலும், தமிழகத்திலும் பள்ளிவாசல்கள் இந்துக்களை அரவணைக்கும் அல்லாஹ்வின் ஆலயமாக மாறியதை சவூதி அரேபியாவிலுள்ள ஊடகங்கள் வரை மெய் சிலிர்த்து எழுதியுள்ளன.
எங்களோடு அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மச்சான்களாகவும் ஒரு தாய் வயிற்று மக்களாக ஒரே தொப்புள் கொடி உறவுகளாக வாழ்ந்து வரும் இந்து கிறித்தவ சொந்தங்களே....
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி ஒவ்வொரு மக்களின் இல்லத்திலும் அடுப்பு எரியும் வரை இஸ்லாமிய சமுதாயத்தின் அடுப்பு எரிந்து கொண்டே இருக்கும்.
உங்களுக்கு பசி என்றாலும் ஆபத்து என்றாலும் அருகிலுள்ள பள்ளிவாசலுக்கு செல்லுங்கள், 24 மணிநேரமும் அங்கே உங்களை அரவணைப்பதற்கும், உங்களுடைய பசியை ஆற்றுவதற்கும் இஸ்லாமிய சமுதாயம் காத்துக்கொண்டிருக்கிறது.
பாகிஸ்தான் முஸ்லிம்களாக இருந்தாலும், இந்திய முஸ்லிம்களாக இருந்தாலும், உலக முஸ்லிம்களாக இருந்தாலும் மனிதநேய விசயத்தில் இமயத்தை தாண்டும் அளவிற்கு இருக்கிறோம் என்றால் அதற்கான காரணகர்த்தா யார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், அதற்கான பதிவு தான் இது...
இன்று இவ்வுலகில் உயிரோடு வாழும் எந்த முஸ்லிம் தலைவரும் அல்ல, 1400 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகை விட்டு சென்ற முஹம்மது நபி அவர்கள் மட்டுமே...
அவர் மறைந்தாலும் அவர் விட்டுச்சென்ற கொள்கை எங்களுடைய உள்ளத்தில் நிலைத்து நிற்கிறது. மதத்தை வென்றது மனிதநேயம் அல்ல, எங்கள் மதம் தான் எங்களுக்கு மனிதநேயத்தையே கற்றுத்தந்தது. முஹம்மது நபி அவர்கள் தான் எங்களை மனிதநேயத்தோடு வாழ கற்றுக்கொடுத்தார்.
உங்களுடைய கண்களில் ஒரு துளி கண்ணீர் வெளியேறினாலும் நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வார்த்தெடுத்த சமுதாயம் என்ற தகுதியை இழந்து விடுவோம்.
அண்டை வீட்டுக்காரர் பசித்திருக்க நீ மட்டும் உணவு உண்ணக்கூடாது அவ்வாறு உண்டு விட்டால் நீ முஸ்லிம் என்ற தகுதியை இழந்து விடுவாய் என்று அந்த உத்தமர் எங்களுக்கு எச்சரிக்கை செய்து விட்டு எங்களை விட்டு சென்று விட்டார்.
மனிதகுலம் போற்றும் அந்த உத்தமர் உருவாக்கிய சமுதாயம் தான் முஸ்லிம் சமுதாயம் என்பதையும் முஹம்மது நபி இறைவனின் தூதராக அனுப்பப்பட்டவர் என்பதையும் இப்பதிவின் மூலம் உங்களுக்கு கூறிக்கொள்ளவே இப்பதிவை இயற்றியுள்ளோம்.
மகிழ்வுடன் - முகநூல் முஸ்லிம் மீடியா


0 Comments