இந்த நாட்டில் வாழும் எங்கள் சமூகத்துக்குள்ளும் இஸ்ரேலிய மொசாத் உளவுத் துறைக்கே பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடியவர்களும் பதவிக்காகவும் அரசியலுக்காகவும் சமூகத்தைக் காட்டிக் கொடுப்பவர்களும் நிறையவே உள்ளனர்தான்.
ஆனால் அவர்களை கண்டு பிடிப்பது சற்றுக் கஷ்டம். நெருக்கமாகவும் இறுக்கமாகவும் இபாபத்தாளிகள் போன்றும் இருப்பதனால்.. இல்லை...இல்லை... நடிப்பதனால்..
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா
ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தருமதேவன் கோவிலிலே ஒளி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


0 Comments